குறுக்கெழுத்து – 4
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.
|
குறுக்காக: 5.போன பிறவித் தொடர்பு அறிய இருட்டறை இரண்டு விட்டு குவி (5)
6.அருகே மூன்றாவதின் திறப்பைத் தாங்க முடியாது (2)
7.பிராமண வீட்டில் உனக்கு என்ன பார்வை (3)
8.பத்மா காலின்றி தடையோடு சுற்றுவது பாயா ஊரா? இரண்டும்தான் (5)
11.எதை சுற்ற தந்தம் தலை விட்டுப் பெற்றவர் (2, 3)
12.புல்லா சைவத்திற்கு எதிராக மாறியது? (3)
14.இதன் வருகையில் ஆபத்து தலையை விட்டுப் பறந்துவிடும் (2)
15.வையாமல் கானா நடுவில் வந்தாலும் இனிப்பு அலுக்காது (5)
1.ஈரம் தலைவனின்றி தவிக்க ஈரம் (6)
2.முன்னாள் முதல்வரின் மூச்சிருந்த இடம்? (3)
3.வைகறையில் யோசித்தும் யோகமின்றிக் கலைத்துக் காவலில் போட்டு (2, 3)
4.சுந்தரர் சுமந்தது மண்டைக்குள் முதலில் கூவ (2,2)
9.கந்தர் வாகனம் நெல் வகை சேர்ந்து ஊர் (6)
10.தாயாதி கொஞ்சம் அந்நிய அபிராமியைப் பாடியதா? (5)
11.எது நடுவில் கனிவாய் திரும்ப எண் (4)
13.ஆபரணம் பொட்டுக்கு மேல் குறிப்பிட்டு (3)
|
||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
அதற்குள் நான்கு பேர் சுறுசுறுப்பாக விடைகளை அனுப்பிவிட்டீர்கள்.
திருமூர்த்தி, மும்பை ஹரிஹரன் – எல்லா விடைகளும் சரியே.
சாந்தி நாராயணன் – 11 நெடுக்காக தவிர எல்லாம் சரியே. மீதமுள்ள இரண்டையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்.
முத்து – 11 , 3 நெடுக்காக தவிர எல்லாம் சரியே.
மிகவும் நன்றாக சுறுசுறுப்பாக இருந்தது.
தங்கள் பொருள் விளக்கங்கள் (definitions) சுவையாக உள்ளன.
6,11,14 கு , 11 நெ – இவற்றை மிகவும் ரசித்தேன்.
நன்றி!
பூங்கோதை – வழக்கம் போல எல்லா விடைகளும் சரியே.
கதிர்மதி – நல்வரவு. உங்கள் விடைகளும் எல்லாம் சரியே.
ராமையா – 11 நெடுக்கு தவறு. 2 நெடுக்கு இன்னும் கொஞ்சம் முயலுங்கள் – மூன்றெழுத்து தானே! மற்ற எல்லா விடைகளும் சரியே.
விஜய், யோசிப்பவர், 10அம்மா – எல்லா விடைகளும் சரியே.
கோபால்சாமி – 13 நெடுக்காக தவிர மற்ற எல்லா விடைகளும் சரியே.
வீ.ஆர்.பாலகிருஷ்ணன் – 2 நெடுக்காக தவிர மற்ற எல்லா விடைகளும் சரியே.
சாந்தி நாராயணன் – இப்போது எல்லா விடைகளும் சரியே.
நாகராஜன், பார்த்தசாரதி – எல்லா விடைகளும் சரியே.
மனு – 1 நெடுக்காக தவிர மற்ற எல்லா விடைகளும் சரியே.
மாதவ் – 11 நெடுக்காக தவிர மற்ற எல்லா விடைகளும் சரியே.
அருமையோ அருமை. தமிழில் இப்படி ஒரு குறுக்கெழுத்துப்போட்டியை இப்போதுதான் பார்க்கிறேன். விடைகளுக்கான குறிப்புகள் மூளையை உசுப்பும்படி இருக்கின்றன. விடைகள் கிடைக்காமல் திணறும்போது நம் தாய்மொழியில் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என சிறு அவமானஉணர்வும் தலைதூக்குகிறது. முயற்சிக்கிறேன் 5வது புதிரை எதிர்பார்க்கிறேன். இந்த அனைத்திற்கும் முயற்சித்து விடைகளைப் பார்த்தாயிற்று.